Thursday 28 November 2013

தங்கையின் வலி அண்ணனின் மனதில்

தங்கையும் நானும் மழலையில் விளையாடிய
மாமரத்துக் கீழே மாம்பழத்தின் மணமும்
என் தங்கையின் விளையாட்டு குணமும்
என் மனதில் என்றும் மாறாத மணம்

மங்கையாகிய என் தங்கை பற்றிய என் மனதின் ஆசை
அவள் விரும்பவதை மறுக்காமல் தர ஆசை
திருமணம் என்ற காலம் வந்ததும்
அவள் மனதிற்கு ஏற்ப முடிவு செய்ய என் ஆசை
ஆனால் தங்கையின் இறுதி ஆசை அண்ணனின் முடிவே

தாய்தந்தையால் தீர்வு செய்வதே அண்ணனின் ஆசை
மணமகனை பெரியவர்களாய் தேர்வு செய்ததும் தங்கை
அண்ணா உன் முடிவு தான் எனக்கு என்றது அவள் வாஞ்சை

அன்று நான் கூறிய வார்த்தையை மகிழ்ச்சியுடன்
ஏற்றுக் கொண்ட என் தங்கை
அவள் ஆசையை தவிர்த்து அண்ணனுக்காக
ஏற்றுக் கொண்ட என் தங்கை

திருமணம் முடிந்து ஒரு வருடத்திற்குள்
இரண்டு மாத குழந்தையுடன் தங்கையை
விதவை கோலத்தில் கண்ட அண்ணனின் மனது
தங்கை குழந்தையுடன் தவிக்கும் தவிப்பையும்
இனி என் வாழ்வில் ஏது ஒளி என் குழந்தைக்கு ஏது வழி
என்ற நிலையில் விடை தெரியாமல் தவிக்கும் அண்ணனின் வலி

போலி பன்னிக்குட்டி


4 comments:

  1. இந்த வலி தீராத வலி. உங்கள் கவிதை முயற்சிக்கு வாழ்த்துக்கள். எழுதிக் கொண்டே இருங்கள் எழுத எழுததான் சிந்தனையும் கவிதையும் மேலும் பொலிவு பெறும். பாராட்டுக்கள்

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா
    மனதை கனக்கவைத்து விட்டது ஐயா.. அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. மனதை கனங்க வைத்தது... இந்த நிலைமை யாருக்கும் வரவே கூடாது...

    ReplyDelete
  4. வணக்கம்... உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete