Thursday 28 November 2013

தங்கையின் வலி அண்ணனின் மனதில்

தங்கையும் நானும் மழலையில் விளையாடிய
மாமரத்துக் கீழே மாம்பழத்தின் மணமும்
என் தங்கையின் விளையாட்டு குணமும்
என் மனதில் என்றும் மாறாத மணம்

மங்கையாகிய என் தங்கை பற்றிய என் மனதின் ஆசை
அவள் விரும்பவதை மறுக்காமல் தர ஆசை
திருமணம் என்ற காலம் வந்ததும்
அவள் மனதிற்கு ஏற்ப முடிவு செய்ய என் ஆசை
ஆனால் தங்கையின் இறுதி ஆசை அண்ணனின் முடிவே

தாய்தந்தையால் தீர்வு செய்வதே அண்ணனின் ஆசை
மணமகனை பெரியவர்களாய் தேர்வு செய்ததும் தங்கை
அண்ணா உன் முடிவு தான் எனக்கு என்றது அவள் வாஞ்சை

அன்று நான் கூறிய வார்த்தையை மகிழ்ச்சியுடன்
ஏற்றுக் கொண்ட என் தங்கை
அவள் ஆசையை தவிர்த்து அண்ணனுக்காக
ஏற்றுக் கொண்ட என் தங்கை

திருமணம் முடிந்து ஒரு வருடத்திற்குள்
இரண்டு மாத குழந்தையுடன் தங்கையை
விதவை கோலத்தில் கண்ட அண்ணனின் மனது
தங்கை குழந்தையுடன் தவிக்கும் தவிப்பையும்
இனி என் வாழ்வில் ஏது ஒளி என் குழந்தைக்கு ஏது வழி
என்ற நிலையில் விடை தெரியாமல் தவிக்கும் அண்ணனின் வலி

போலி பன்னிக்குட்டி


Wednesday 27 November 2013

பள்ளிக்கூடம்

பள்ளிக்கூடம் என்பது
என் வாழ்வின் வரலாற்றில் ஆயுள்கூடம்
ஆடல்களும் பாடல்களும் நிரம்பிய நினைவுக்கூடம்
உடன் பயிலும் நண்பர்களுடன்
நேற்று தொலைக்காட்சியில் கண்டதை
உரையாடும் கூடலில் ஒரு ஆனந்த கூடல்

ஆசிரியரை கண்டதும் ஓர் அதிர்வுக்கூடல்
பாடங்களை படிக்கையிலே
சத்துணவு சமையலின் மணக்கும்
மணத்தின் மீது ஓர் ஆர்வக்கூடல்

உணவு உண்ண செல்லும் போது நண்பர்களுடன்
நீயா நானா என்ற ஓர் ஆர்வக்கூடல்
வரிசையில் உட்கார்ந்து உண்ணச்செல்லும் போது
ஆசிரியரின் கூறும் வாழ்த்துப்பாடல்
உண்டு முடித்த இடைவேளையில்
மகிழ்ச்சி பொங்கும் விளையாட்டுக்கூடல்

உணவு இடைவேளைக்கு பின்
பள்ளியறைக்கு செல்லும் போது
மாலைநேரத்தை எதிர்பார்க்கும் மகிழ்ச்சிக்கூடல்
மாணவ நண்பர்களுக்குள் ஊமை விளையாட்டுக்கூடல்

ஆசிரியர் தேடல்கூடல் முடிவதற்கு முன்பாவே
பள்ளியின் மாலை மணி ஓசை கேட்டதும்
நண்பர்களுக்குள் மகிழ்ச்சி ஒலியுடன்
நீயா நானா என போட்டியிட்டு ஓடி
முதலில் வீட்டுக்கு செல்வது நானே

கவிஞ்சர் போலி பன்னிக்குட்டி

Monday 25 November 2013

என் உயிர் தாயே

தாயே

என்னை கருவில் சுமந்து ஈன்றாய் நீயே
குளிரிலும் பனியிலும் என் உடல்நலத்தை காத்தாய் நீயே
உணவையும் உறக்கத்தையும் கனிவுடன் தந்தாய் நீயே
தீஞ்சொல் பேசும் போது அன்பில் அறைந்தாய் நீயே

பள்ளிக்கு செல்ல மறுத்து அடம் பிடித்த என்னை
பலமுறை அடித்து இழுத்துச் சென்றாய் நீயே
சரியாக கல்லாத என்னை பயிற்றுவித்தாய் நீயே

பணிக்கு செல்லாமல் என் வழியில் நான் செல்ல
நெறிப்படுத்தி நேர்வழியைக் காட்டினாய் நீயே
எந்த நேரத்திலும் எந்த வேலையிலும்
என்னையே நினைத்தாய் நீயே

எனது வெற்றிக்கு படிக்கட்டாய் மாறினாய் நீயே
உனக்கு கைமாறு செய்வதற்கு நான்
எத்தனை கோடி எடுக்க வேண்டும் தாயே

தாயின் அடிமை
கவிஞ்சர் போலி பன்னிக்குட்டி

Saturday 23 November 2013

அடுத்து வரும் வரலாறு

இரண்டாம் உலகம் உருட்டிய செல்வராகவன் அவர் அடுத்த திரைக்கு நினைத்த உலகத்தை உருட்டுவதற்காக நினைத்திருப்பதே ஒரு சில எழுத்துக்களில் கூறலாம், ஆனால் அது கூடுவது மிகக் கடினம். ஆனால் அவர் மனதில் தோன்றுவது ஆணி போல ஒரே எழுத்து கூறுங்கள்

இதை கூறுவது
போலி பன்னிக்குட்டி

பள்ளிக்கூடம் செல்லும் பெண்ணே

பள்ளிக்கூடம் செல்லும் பெண்ணே
கொஞ்சம் திரும்பி பாரடி கண்ணே
நீ பாராமல் பார்த்ததும் ஏங்குதே மனமே
உனை தேடுதே தினமே
தொடருதே உன் நினைவே

தோன்றுதே கனவே
கனவில் தோன்றும் உன் முகமே
என் நிலையை மறக்கடிக்கிதே தினமே
நீ நடக்கும் போது வரும் மணமே

உன் பின்னே நான் வரும் அன்றே
என் பின்னே என்னவென்று தெரியவில்லை கண்ணே
உறங்க நினைக்கிறேன் பெண்ணே
என் உணவை மறக்கிறேன் தினமே

நீ நடக்கையில் என் மனதுக்கு நீ மானே
என்னை கடக்கையில் நான் உன் வேணே
என்று ஏன் நினைக்கிறாய் கொம்புத்தேனே
நீ சரியாய் கூறடி பெண்ணே

உன் குரலுக்காக ஏங்குகிறேன் கண்ணே
அதற்காக வாழ்கிறேன் பெண்ணே
என் வாழ்வும் தாழ்வும் நீயடி கண்ணே
உனக்காக வாழ்கிறேன் புரிந்து கொள்ளடி தேவதையே

கவிஞ்சர் போலி பன்னிக்குட்டி

Friday 22 November 2013

மழலையின் பசி

பசி பசி பசி 
பார்க்கும் பார்வையில் ஒரு பசி
மழலையில் ஒரு பசி
மாலை வேகத்தில் ஒரு பசி
தகப்பன் வரும் வேளையில் 
அதிமீறல் பசி
தகப்பன் வாங்கி வரும் பண்டத்தின் மீது பசி
தகப்பனுக்கு பல பசி
பொழுது விடிந்தாலும் பசி
பொழுது மறந்தாலும் பசி
பணப்பசி
பணம் கிடைத்தால் மதுப்பசி
தகப்பனுக்கு மதுமணம் அருந்தினால்
குழந்தைகளுக்கு தேடல் பசி
குழந்தைகள் முகம் பார்த்ததுமே 
ஏக்கத்தின் பசி
பசி பசி பசி
தகப்பனின் பசியா
குழந்தையின் பசியா
என்ன இறைவா
இது யார் பசி

கவிஞ்சர் போலி பன்னிக்குட்டி

இரண்டாம் உலகம் - திரை விமர்சனம்

வீட்டில் இருப்பவர்கள்
நினைப்பது ஒரு உலகம்
வெளியில் செல்பவர்கள்
காண்பது ஒரு உலகம்
ஊர்ஊராய் சுற்றி வருபவர்கள்
ரசிப்பது ஒரு உலகம்


செல்வராகவனின் நினைவால் உருண்டு
இருக்கும் இரண்டாம் உலகம்
ஆர்யா களைகட்ட
அனுஷ்கா கல்லாகட்ட
முதலாம் உலகில்
ஆர்யாவை பார்த்த அனுஷ்கா
அவர் சேவையை கண்டு
அழகை கண்டு
தன் மனதால் மயங்கி
காதலில் விழுகிறார்

தவிர்க்க முடியாத சூழலினால்
மறுக்கும் ஆர்யா
மறுத்த சில தினங்களில்
தன்னை மறந்து
காதல் வசப்படுகிறார்
அதை மறுத்த அனுஷ்கா
விதியின் வசத்தால்
வசப்படுகிறார்
விபத்தின் வசத்தால்
இறந்தும் போகிறார்

இரண்டாம் உலகில்
கற்பனை கலந்து வீசுகிறார்
காதலில்லா ஒரு உலகம்
மூர்க்கமான ஒரு நரகம்
அதில் வெட்டியாய் சுற்றும் ஆர்யா
வெட்டிக் கொண்டே சுற்றும் அனுஷ்கா

மோதலில் மட்டுமே கலக்கும் இவர்கள்
காதலிலும் கலப்பது எப்படி
அதை திரையில் பாரு அதிரடி

மனதிற்கு ஒரு புதிய கற்பனை உலகம்
ஆங்கில படங்களுக்கு இணையான ஒளி
மறக்காமல் கண்டுகளி

இசைசாரலில் மூழ்கி முத்தெடுத்த பாடல்கள்
அதை விஞ்சி நிற்கும் பின்னணியிசை
ஆஹா ஓஹோ


கவிஞ்சர் போலி பன்னிக்குட்டி

Thursday 21 November 2013

விடியல் கவிதைகள்

விடியல்

விடிந்தும் விடியாமல்
கண் தெரிந்தும் தெரியாமல்
கரை கடந்தும் காணாமல்
கடக்கும் கண்கள்
காணும் மூன்றாம் கண்ணே
விடியல்
-------------------------------------

மணம் என்னும் மனம்

மணம் என்னும் மயக்கத்தில்
மாட்டி தவிக்கும்
மனித மனம் போல்
மனம் ஏங்கும் தூரல்
குழப்பத்தின் சாரல்
என்ன என்ன என்ன
------------------------------------

மனவலி

என் மனம் என்பது
ஒரு வெறிபிடித்த ஊற்று
அதில் சாக்கடை போல் கலக்கும்
ஒரு ஆதங்கம்
அதை நான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்
எங்கு கூற இறைவா இறைவா
--------------------------------------

கணவனின் இன்பவலி

இடை என்னும் உன் இடையில்
இடையில்
மாட்டிக் கொண்டு தவிக்கும்
மடையன் ஆனேனடி

கவிஞ்சர் போலி பன்னிக்குட்டி

Saturday 16 November 2013

பார்க்க வைத்த பூங்கொடியே

உன் பார்வை என்ற பார்வையிலே
என்னை பார்க்க வைத்த பூங்கொடியே
நீ பார்த்தும் பாரா பறவையைப் போல்
பறந்து போனது ஏனடியே

உன்னை பார்த்திருந்த நாள் முதலாய்
என் பாதை எங்கும் நீயடியே
பார்க்கும் பார்வை முழுவதிலும்
பளிங்கு கல் போல் உன் முகமே

உன் பார்வை என்ற பார்வையிலே
எனை பார்க்க வைத்த பூங்கொடியே
என் இதயம் என்னும் வாசலிலே
இரண்டு பக்கம் நீயடியே
என் இரு பக்க கதவுகளின்
இன்பம் துன்பம் நீயடியே

போலி பன்னிக்குட்டி

சின்னப் பெண்குட்டி

அந்த பக்கம் போறவளே சின்னப் பெண்குட்டி
இந்த பக்கம் வந்து போடி கொஞ்சம் கைதட்டி
கம்பனுக்கு சேதி சொல்லும் செல்லப் பெண்குட்டி
அந்த சேதி என்ன சொல்லிப் போடி என் தங்கக்கட்டி
ஏய் அந்தப் பக்கம்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் 
அந்த பக்கம் போறவளே சின்னப் பெண்குட்டி
இந்த பக்கம் வந்து போடி கொஞ்சம் கைதட்டி
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் 
இதை எழுதியது ................ வேற யாரு
உங்கள் போலி பன்னிக்குட்டி


நான் போலி பன்னிக்குட்டி

நண்பர்களே வணக்கம்

என் கவிதைகளை பிரசுரிக்க ஒரு தளம் தேவைப்பட்டது. நண்பன் ஆரூரின் உதவியால் பதிவிட துவங்குகிறேன். நன்றி நாளை முதல் என் கவிதைகள் நாளை முதல் என் கவிதைகள் உங்கள் பார்வைக்கு.

பிரபல பதிவர்களுடன் நான்

எனது இயற்பெயர் வெங்கடேஷ். இந்த ஆண்டு பதிவர் சந்திப்புக்கு வந்த போது மற்றவர்களால் போலி பன்னிக்குட்டி என்று கலாய்க்கப்பட்டதால் அந்த பெயரையே வைத்துக் கொண்டு விட்டேன். 

தாங்கள் கொடுக்கப்போகும் ஆதரவுக்கு நன்றி நண்பர்களே.

நன்றி நன்றி நன்றி

போலி பன்னிக்குட்டி