Saturday 16 November 2013

பார்க்க வைத்த பூங்கொடியே

உன் பார்வை என்ற பார்வையிலே
என்னை பார்க்க வைத்த பூங்கொடியே
நீ பார்த்தும் பாரா பறவையைப் போல்
பறந்து போனது ஏனடியே

உன்னை பார்த்திருந்த நாள் முதலாய்
என் பாதை எங்கும் நீயடியே
பார்க்கும் பார்வை முழுவதிலும்
பளிங்கு கல் போல் உன் முகமே

உன் பார்வை என்ற பார்வையிலே
எனை பார்க்க வைத்த பூங்கொடியே
என் இதயம் என்னும் வாசலிலே
இரண்டு பக்கம் நீயடியே
என் இரு பக்க கதவுகளின்
இன்பம் துன்பம் நீயடியே

போலி பன்னிக்குட்டி

2 comments:

  1. போலி பன்னிக்குட்டி என்ற பெயர் வித்தியாசமா இருக்கேன்னு யோசிச்சுட்டிருந்தப்ப, முகநூல் நண்பர் வேண்டுகோள்ல முகத்தைப் பாத்ததுமே உங்களை அடையாளம் புரிஞ்சுது. கவிதைகளைப் பொறிய ஆரம்பிச்சுட்டீங்க... எங்கள் உலகிற்குப் புதுவரவான உங்களுக்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகளும், வரவேற்பும் வெங்கடேஷ்!

    ReplyDelete
  2. காதல் கவிதை என்ற அளவில் இந்தக் கவிதை ஓ.கே. நல்லாத்தான் இருக்கு. காதல் தவிரத்து மத்த விஷயங்களை எழுதறப்ப போ.ப.கு.வை முழுசா மதிப்பிடலாம்னு நினைக்கிறேன். (அதுசரி... ஆரூரான் சப்போர்ட்ல ப்ளாக் ஆரம்பிச்சிருக்கீஙகளா? ‘பலமான’ சப்போர்ட்தான்!)


    ReplyDelete