Friday 22 November 2013

இரண்டாம் உலகம் - திரை விமர்சனம்

வீட்டில் இருப்பவர்கள்
நினைப்பது ஒரு உலகம்
வெளியில் செல்பவர்கள்
காண்பது ஒரு உலகம்
ஊர்ஊராய் சுற்றி வருபவர்கள்
ரசிப்பது ஒரு உலகம்


செல்வராகவனின் நினைவால் உருண்டு
இருக்கும் இரண்டாம் உலகம்
ஆர்யா களைகட்ட
அனுஷ்கா கல்லாகட்ட
முதலாம் உலகில்
ஆர்யாவை பார்த்த அனுஷ்கா
அவர் சேவையை கண்டு
அழகை கண்டு
தன் மனதால் மயங்கி
காதலில் விழுகிறார்

தவிர்க்க முடியாத சூழலினால்
மறுக்கும் ஆர்யா
மறுத்த சில தினங்களில்
தன்னை மறந்து
காதல் வசப்படுகிறார்
அதை மறுத்த அனுஷ்கா
விதியின் வசத்தால்
வசப்படுகிறார்
விபத்தின் வசத்தால்
இறந்தும் போகிறார்

இரண்டாம் உலகில்
கற்பனை கலந்து வீசுகிறார்
காதலில்லா ஒரு உலகம்
மூர்க்கமான ஒரு நரகம்
அதில் வெட்டியாய் சுற்றும் ஆர்யா
வெட்டிக் கொண்டே சுற்றும் அனுஷ்கா

மோதலில் மட்டுமே கலக்கும் இவர்கள்
காதலிலும் கலப்பது எப்படி
அதை திரையில் பாரு அதிரடி

மனதிற்கு ஒரு புதிய கற்பனை உலகம்
ஆங்கில படங்களுக்கு இணையான ஒளி
மறக்காமல் கண்டுகளி

இசைசாரலில் மூழ்கி முத்தெடுத்த பாடல்கள்
அதை விஞ்சி நிற்கும் பின்னணியிசை
ஆஹா ஓஹோ


கவிஞ்சர் போலி பன்னிக்குட்டி

8 comments:

  1. வாய்ப்பு கிடைக்கையில் பார்த்து விட வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெற்றிவேல், கண்டிப்பாக பாருங்கள்

      Delete
  2. யோவ்... இதுவும் கவுஜையா?

    ReplyDelete
  3. யோவ்... இதுவும் கவுஜையா?

    ReplyDelete
  4. ஓ அப்படியும் இதை எடுத்துக்கலாமா மயிலன்

    ReplyDelete
  5. இவரு அறம் பாடாம விடமாட்டாரு போல .......

    ReplyDelete
  6. நல்லா சமைச்சிருக்கீங்க போலி :)

    ReplyDelete