Wednesday 27 November 2013

பள்ளிக்கூடம்

பள்ளிக்கூடம் என்பது
என் வாழ்வின் வரலாற்றில் ஆயுள்கூடம்
ஆடல்களும் பாடல்களும் நிரம்பிய நினைவுக்கூடம்
உடன் பயிலும் நண்பர்களுடன்
நேற்று தொலைக்காட்சியில் கண்டதை
உரையாடும் கூடலில் ஒரு ஆனந்த கூடல்

ஆசிரியரை கண்டதும் ஓர் அதிர்வுக்கூடல்
பாடங்களை படிக்கையிலே
சத்துணவு சமையலின் மணக்கும்
மணத்தின் மீது ஓர் ஆர்வக்கூடல்

உணவு உண்ண செல்லும் போது நண்பர்களுடன்
நீயா நானா என்ற ஓர் ஆர்வக்கூடல்
வரிசையில் உட்கார்ந்து உண்ணச்செல்லும் போது
ஆசிரியரின் கூறும் வாழ்த்துப்பாடல்
உண்டு முடித்த இடைவேளையில்
மகிழ்ச்சி பொங்கும் விளையாட்டுக்கூடல்

உணவு இடைவேளைக்கு பின்
பள்ளியறைக்கு செல்லும் போது
மாலைநேரத்தை எதிர்பார்க்கும் மகிழ்ச்சிக்கூடல்
மாணவ நண்பர்களுக்குள் ஊமை விளையாட்டுக்கூடல்

ஆசிரியர் தேடல்கூடல் முடிவதற்கு முன்பாவே
பள்ளியின் மாலை மணி ஓசை கேட்டதும்
நண்பர்களுக்குள் மகிழ்ச்சி ஒலியுடன்
நீயா நானா என போட்டியிட்டு ஓடி
முதலில் வீட்டுக்கு செல்வது நானே

கவிஞ்சர் போலி பன்னிக்குட்டி

3 comments:

  1. இனிய நினைவுகள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. மலரும் நினைவுகள்... தொடர்க.

    ReplyDelete
  3. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்! அது என்னங்க போலி பன்னிக்குட்டி! ஒரு வேளை நீங்கதான் பதிவர் சந்திப்புல பதிவர் பன்னிக்குட்டியா கலந்துகிட்டீங்களா? தொடர்கிறேன்!

    ReplyDelete