Thursday, 3 April 2014

உள் உணர்வு ஆயிரம் மன நிறைவு ஓரிடம்
ஓரிடத்தை மறுக்க முடியாமல் உணர்வை கட்டுப்படுத்த முடியாமல்
கலங்குவதோ கடமையை மறுக்க முடியாமல் மணக்கும் மல்லிகைப் போல் ஓரிடம் மதில் ஏற்க முடியாமல் தவிக்கும் ஏக்க தவிக்கும் மனம் அவளிடம்
எனை மறக்க முடியாமல் தவிக்கும் மனமோ அவளிடம்

அவளை ஏற்க முடியாமல்0,,,,,0

Thursday, 27 March 2014

என் மனதில் சிறந்த நாட்கள்


நான் பள்ளி செல்கையில் பேனா நோட்டு புத்தகம்
பெற்றோர் வாங்கிக் கொடுத்தது சிறந்த நாட்கள்
நண்பர்களிடம் காண்பித்து மகிழ்ந்தது சிறந்த நாட்கள்
ஊருக்கு செல்லும் போது ஜன்னலருகில் அமர்ந்தது
மறக்க முடியாத சிறந்த நாட்கள்
என் முறைப் பெண்ணை பார்த்து சிரித்து ஒதுங்கி மயங்கியது
நினைவில் நீங்காத சிறந்த நாட்கள்
இனி என் மனதில் சிறந்த நாட்கள்
முடிவெடுக்க முடியாத குழம்பி தவிக்கும் நாட்களே
சிறந்த நாட்களா இல்லையா என்று தேடும் நாட்களாக உள்ளது

கவிஞ்சர் போலி பன்னிக்குட்டி

Wednesday, 26 March 2014

பூ பூக்கும் புன்னகையே

பூ பூக்கும் புன்னகையே
பூமியிலே பிறந்தவளே
உன்னிடத்தில் உள்ளதென்ன
அந்த பிரம்மனுக்கும் தெரியவில்லை
தெரிந்திருந்தால்
அப்பொழுதே களவு செய்து
வைத்து விட்டு
கடவுளிடம் பொய்யுரைத்திருப்பான்

கவிஞ்சர் போலி பன்னிக்குட்டி

Thursday, 27 February 2014

நாணயத்தை இழந்தவன்

நாணயத்தை இழந்தவன் உலகத்தின் கண்களுக்கு
செத்தவனாகவே கருதப்படுகிறான்
வாழும் வாழ்க்கையில்
நேர்மை எது
நாணயம் எது
லட்சியம் எது
நிதானம் எது
என்பது அவன் மனதை
அறிந்தாலே புரிந்து விடும்
பார்க்கும் பார்வையில் நேர்மை
நினைக்கும் நினைப்பில் துய்மை
வாழும் வாழ்வில் எளிமை
செய்யும் செயலில் இனிமை
என்பதை இழந்தவன்
நாணயத்தை இழந்தவன் உலகத்தின் கண்களுக்கு
செத்தவனாகவே கருதப்படுகிறான்

போலி பன்னிக்குட்டி

Monday, 17 February 2014

ஒளிகாட்டும் சூரியனே

பிறந்தாய் பூமியிலே வளர்ந்தாய் சூழலிலே
சுழல்வாய் வாழ்க்கையிலே சூழ்நிலையோஉன் காலடியிலே
காண்பாய் காலையிலே கதிரவனின் கனல் கூடக்கூட
அதன் குமுறலின் கூடலிலே

எழுவாய் கதிரவனின் வேகத்திலே
உனை சுற்றி இருப்பவர்களோ உன் சுழற்சி வேகத்திலே
விழுவார் பார்க்கும் பார்வையிலே
நீ பறப்பாய் வேலையிலே

இருப்பாய் நேர்மையிலே நடப்பாய் தூய்மையிலே
துணிவாய் நடப்பாய் உன் பாதையிலே
பார்ப்போர்கள் மனம் பரபரக்கும் சூழலிலே
உனை பெற்றவர்கள் தவம் கிடந்தார்களா
என உலகமே வியக்கையிலே

பொழிந்தது வானம் விளைந்தது பூமி என்பதன்
பொருளுக்கேற்ப தூய்மையான
மனம் கொண்ட தாய் தந்தையர்களுக்கு
ஒளி காட்டும் சூரியனே நீ.
இங்கு நீ என்பதே நான்

போலி பன்னிக்குட்டி

Thursday, 13 February 2014

சரக்கு இருக்கு

சரக்கு சரக்கு இருக்கு இருக்கு
முறுக்கு முறுக்கு இருக்கு நொறுக்கு
எனக்கு எனக்கு என தவிக்க தவிக்க
மனதில் இருக்கு

மணக்க மணக்க மனதில் இருக்கு
மகிழ மகிழ நினைவில் இருக்கு
ஆரூர் மூனா முனக முனக
எழுத ஒரு கவிதை இருக்கு

முழுக்க முழுக்க மூனாவே நீ
முழிக்க முழிக்க நானாவே
திரும்பிப் பார்த்தால் வெறும் கானாவே
காதுக்கு இது வேணாமே
இதை கவிதை என்றே கூறுவேன் நானாவே

இதில் ஆரூர் மூனாவே
முக்கிய புள்ளி தானாவே
இருக்கு இருக்கு சரக்கு சரக்கு
நொறுக்க இருக்கு முறுக்கு முறுக்கு
சரக்கடிக்கா மூனாவே மணியாச்சி போலாமே

போலி பன்னிக்குட்டி

Friday, 7 February 2014

பண்ணையாரும் பத்மினியும் - சினிமா விமர்சனம்

பலகோடி பணமிருந்தாலும் பக்கத்தில் பல உறவுகள் இருந்தாலும் திடீரென வந்த ஒரு வாகன சொந்தமே எதிர்பாராத மகனைப் போல மகனுக்கு காய்ச்சலோ ஜொரமோ வந்தால் கூட  சரி நாட்டு வைத்தியம் பாத்துக்கலாம் என சொல்லும் ஊருக்குள் வாழ்கிறார்கள் அந்த வாகனத்தை வழி நடத்துவதற்காக வழிப்போக்கனாக வருகிறார் விஜய் சேதுபதி 


இவர் திரையில் ஜொலிக்கிறாரா ஜொலிக்கவில்லை என்பது தான் மனதுக்கு கேள்விக்குறியாக இருக்கிறது. இவர் மகன் என்பதா அல்லது திடீரென வந்த அந்த வாகனம் மகன் என்பதா இது தான் கதை திரைக்கதையில் அமைக்கப்பட்டுள்ள விஷயம் இதில் ஹீரோ என்று ஒரு பெண்ணைப் பெற்ற தாய் தந்தையை கூறலாமா அல்லது விஜய் சேதுபதியை கூறலாமா

ஒரே மகளைப் பெற்ற தாய் தந்தையர்கள் மகள் எது கேட்டாலும் கொடுக்கிற வழக்கமாகி விட்டது. வீட்டிற்கு வரும்போதெல்லாம் வீட்டில் இருக்கும் பொருளை எடுத்துச் செல்வதே வழக்கமாகி விட்டது. திடீரென வந்த பழமையான மகிழுந்தை மகனைப் போல நினைக்கையில், சிறு விபத்தென்றாலும் அவர்கள் மனதை பதைக்கும். 


ஒரே மகள் கேட்டாள் என்ற காரணத்திற்காக பல கனவுகளையும் ஆசைகளையும் மனதில் மறைத்துக் கொண்டு மகள் கேட்டு விட்டாலே என மகிழ்ச்சி நிறைந்த கவலையோடு மகளுக்காக கொடுக்கிறார்கள். மகளைப் பெற்ற தம்பதியருக்கு மனதில் வலி. மகனைப் போன்ற வாகனத்தை கேட்கிறார்களே, போயும் போயும் இதை கொடுத்தீர்களே என்று மகளே திரும்ப வாகனத்தை கொண்டு வந்து விட்டுச் செல்ல காரணமாக இருக்கிறார் விஜய்சேதுபதி.

திரையில் மனதை கொடும் ஒரு நிகழ்வு சிறு வயதில் இருந்து ஒரு சிறு பிள்ளை காரில் முன் இருக்கையில் அமர ஆசைப்படும் ஒரு சிறுவன் அமர முடியாமல் ஏமாற்றத்துடன் ஊரை விட்டு செல்கிறான். 20 வருடங்களுக்கு பிறகு அதே சிறுவன் விலையுயர்ந்த மகிழுந்தை எடுத்துக் கொண்டு ஊருக்கு வருகிறான். 

மறைவாக நின்று பார்க்கிறான். பார்த்தவுடன் மேலும் மெருகூட்டப்பட்டு மிகச்சிறப்பாக ஒரு மகன் இருந்தால் அவன் எப்படி திருமணம் முடிந்து குழந்தைகளுடன் கலகலப்பாக இருப்பானோ அந்தளவிற்கு அவர்கள் குடும்பத்துடன் அந்த மகிழுந்தும் அதற்கு உதாரணமாக விஜய்சேதுபதியும் மனைவி குழந்தைகளுடன் மகிழ்வுடன் இருக்கிறார்கள்.

இதனை பார்க்கும் அந்த பையன் மீண்டும் காரில் ஏறி மகிழ்வுடன் பயணிக்கிறான். பண்ணையாரும் பத்மினியும் நினைக்கையில் மக்களுக்கு அவர்கள் மனதிற்கு ஏற்பவாறு ஒரு மலர்ச்சி.

போலி பன்னிக்குட்டி

Monday, 3 February 2014

பருக பருக நினைவுகள் சிறகடிக்க

சிறுக சிறுக பருக பருக 
பரவசம் பெருக பெருக 
உன் நினைவு ஆனந்தத்தில் பறக்க பறக்க 
பல நினைவுகளை நினைக்க நினைக்க
கூற நினைக்குதே மனம் உரக்க உரக்க
இதை பறிமாறிக் கொள்ளனும் சிரிக்க சிரிக்க

போலி பன்னிக்குட்டி

Tuesday, 14 January 2014

ரசங்களில் சிறந்தது

மனிதனின் மனதில் ஓடுவதோ
மிக இனிதான மகிழ்ச்சிரசம்
அதை நினைக்கையிலே
உள்ளுக்குள்ளே பரவசம்

அதை கெடுப்பதும் வளர்ப்பதும்
மனைவியின் மனரசம்
அவளுக்காக நான் நினைப்பதோ
ஒரு கோடி நினைரசம்

அறியாத மனைவியை நினைத்தாலே
உள்ளுக்குள்ளே பதைபதைப்புரசம்
அதை எப்படி புரியவைப்பது என்று
புரியாத குழப்பரசம்

ரசத்திலே சிறந்தது என்னவென்று
கேட்டால் நீ என்ன கூறுவாய்
நானறியேன் ஆனால் நான் கூறுவேன்
சிறந்த பழங்களின் தொகுத்த
பழரசம் தானென்று

என் மனைவியோ கூறுவாள்
வீணாப் போன பழரசமே நான் தான் என்று
என் வலியை நான் யாரிடம் கூறுவேன்
பராபரமே

Friday, 10 January 2014

குழந்தைக்கு இனிப்பு

மனதில் மகிழ்ச்சி நிறைந்த ஒரு துயரம்
அதை செயலில் காட்டுவதற்கு
ஆசை நிறைய உண்டு
ஆனால் பையில் இருக்கும் பணமோ
பற்றாக்குறை
இது தான் என் வாழ்க்கையின்
வற்றாக்குறை
அதை அறிந்து குழந்தை கேட்டது
அப்பா பல்லி மிட்டாய்

-----------------------------

வெந்த வானம்
வெள்ளி நிலா
வெள்ளைப்பால்
வெண்மையாய் ஆறு
வெளிச்சமாய் நீ
வெறுமையாய் நான்

-----------------------------

பாவை போல பார்த்தாயே
பார்வையாலே பூத்தாயே
பூக்கள் கூட பார்க்கச் சொல்லி கேட்டதே
நானும் கூட சொல்லச் சொல்லி கேட்பேனே

நானாய் உன்னை பார்த்தேனே
நீயா சொல்லி கேட்டேனே
பார்வையாலே உன்னை காதலித்தேன்
என்றும் உன்னை அன்பிலே
நான் வாழ வைப்பேனே
உன் வாய் அசைவை

பார்த்த போது நிஜம் கண்டேன்
மயங்கினேன் மகிழ்கிறேன் மானே
என் வாழ்வில் என்றும் தேனே
அது உன் சம்மதத்தில் தானே

போலி பன்னிக்குட்டி